விவசாயம் செய்வோம்

சும்மா போகிற தண்ணிய கரை கட்டி தேக்கி வைத்து,
சும்மா கிடந்த நிலத்தை வரப்புகளால் பிரித்து
வாய்க்கால்கள் அமைத்து,
அடங்காத காளைகளும் அடக்கி ஏர்பூட்டி உழுத உழவனெங்கே?
தன்னுயிராய் அவனும் செய்த விவசாயமெங்கே?
பாறைகளையும் குடைந்து கிணறு வெட்டி,
இறவெட்டியால் நீர் இறைத்து வெள்ளாமை பயிரிட்டு ஊருக்கே உணவளித்த உழவனெங்கே?
உடலுழைப்பிலே உயர்ந்த உழவனெங்கே?
நடுவைக்கும் இயந்திரம் வந்தது.
அறுவைக்கும் இயந்திரம் வந்தது.
உழுவதற்கும் இயந்திரம் பெருகியது.
விவசாயத்தில் ஈடுபாடுதான் மலையேறி போனது.
பட்டமும் பதவியும் அறியாத அந்தக் காலம் மீண்டும் வருமா?
அன்போடு உணவை உற்பத்தி செய்த உழவன் மீண்டு வருவானா?
கணினியில் நாமும் மூழ்கி எதைக் கண்டுபிடிக்கப் போகிறோம்?
நேரத்தை வீணாக்குகிறோம் பணத்தை பெருக்குவதிலே.
காலையிலிருந்து மாலை வரை வெயிலில் கஷ்டப்பட்டு வேயர்வை சிந்தினால் தெரியுமடா விவசாயி படும் துயரம்.
குளுகுளு அறையிலே இருந்து கொண்டு அரசியல் செய்வோருக்கும் நம் போன்ற ஆடம்பர அடிமைகளுக்கும் எங்கே தெரியும்?
உழவனுக்காக குரல் கொடுப்பதெல்லாம் வெறும் அரசியல் விளம்பரம் தானடா.
அதை விடுத்து நாமும் விவசாயம் செய்வோமடா வளமான உலகை நோக்கி...