நட்புக்குள் காதல் சரியா?தவறா?
கண்னே உன்னை காணாமல்
கணத்து கிடக்கிறது என் மனம்!
கண்மூடி பார்க்கிறேன்
இதயத்தில் உன் முகம்!
வீசும் காற்றில் எங்கும்
உன் வாசம் கலந்து வரும்..
பேசும் உன் பூவிதழ் என்றும்
ஒருவித போதை தரும்..
பெண்ணே!
என் மனம் மயங்கி கிடப்பது ஏனடி?
என்னால் முன்போல்
உன் கண் பார்த்து
பேச முடியவில்லையே ஏனடி?
தலை குனிந்து
விழியால் நிலம் குடைந்து
என் உயிர் தப்பிசெல்ல நினைப்பது ஏனடி?
ஆனால்,
இங்கே பாருடா என்று கூறி
உன் பார்வை என் உயிரை
அம்மியில் வைத்து அரைப்பது ஏனடி?
உடம்பெல்லாம் வியர்வை
ஊற்றெடுத்து ஓடுவது ஏனடி?
உலகிற்கே என் இதயம்
கத்தும் சத்தம் கேட்பது ஏனடி?
வார்த்தைகள் யாவும் வாயினுள்
அடைபட்டு சாவது ஏனடி?
மூச்சுக்காற்றில் மூன்னூறு
எரிமலைகளின் வெப்பம்
உருவாவது ஏனடி?
ஆகாயம் போல் கை கால்கள்
அசைய மறுப்பது ஏனடி?
என்னில் ஏன் இந்த மாற்றம்
ஒருவேளை,
இது தான் காதலின் தாக்கமோ?
தொட்டு பேசாதே
அன்பே!!!
தொலைந்து போகிறேன்
உன் முன்பே!!!
சொல் தோழியே!
நம் நட்புக்குள் காதல் வருவது
சரியா? இல்லை தவறா?