தியான வகுப்பு
நிறைவாக வாழலாம் என்று
விரைவாக விளம்பரம் செய்து
சரியான பாதையில் செல்லும் நம்மை
சைக்கோ போல் எண்ண வைத்து
சடக்கென்று மனதை மாற்றும்
சாமர்த்தியமான குருகுலம் …..
சலசலப்பு இல்லா அறையில்
சப்பளமிட்டு அமர வைத்து
சரக்கெதுவும் இல்லாமலேயே
சர்ரென்று போதையை ஏற்றி
கிர்ரென்று கிறுகிறுக்க வைத்து
கொடுவென பிடுங்குவதில் இவர்கள் சிறந்தவர்களே…
அமைதியென்று அலப்பரை செய்து - இடத்திற்கு
அங்கிகாரம் கொடுத்தவன் மனதில்
ஆழமான இரணத்தினை விதைத்து
நியாயமான மனிதர்கள் போலே
நாவால் மட்டும் நல்லதை பேசும்
நயவஞ்சக கூட்டம் அதனை
நாள்தோறும் எட்டி விலக நன்றான வரமே வேண்டும்!
……… நன்னாடன்