அடையாளம்
அடையாளம்
இருட்டும் வெளிச்சமும்
தன் அடையாளத்தை
மாற்றிக் கொள்வதில்லை
அடையாளத்தை மாற்றி
கொள்ளும் எதுவும் தன்
நிலையில் இருப்பதில்லை
மெல்லியகாற்று புயற்காற்றாய்
மாறிய அடையாளம் அகோரமாய் ஆபத்தாய் காணசகியாது
அடையாளங்கள் தொலைத்தது
நம்மைசுற்றி எப்பொழுதும்
நடித்த படி
ஆனாலும் அடையாளங்கள்
மாறுவதில்லை மறைபொருளாய் கல்லரையில் மறையும் வரை