உன்னை மட்டும் புரிந்துகொள்ள
நீலநிற வானம் அதில்
நீந்துகின்ற மேகம்
நீலநிற வானம் அதில்
உலாவரும் நிலவு
நீலநிற வானம் அதில்
சிதறிய நட்சத்திரங்கள்
நீலநிற வானம் அதில்
சுட்டெரிக்கும் சூரியன்
அழகான பூமி அதில்
பரந்து விரிந்த கடல்
அழகான பூமி அதில்
பசுமைகாணா மணல்வெளி
அழகான பூமி அதில்
ஓங்கி வளர்ந்த காடு
அழகான பூமி அதில்
பசுமை போர்த்திய மலைகள்
அழகான பூமி அதில்
வடிவான நீ
அழகான பூமி அதில்
உன்னை விரும்பும் நான்
அழகான பூமி அதில்
பேசப்படும் காதல்
இவைகள் யாவும் எனக்கு
புரியாததாய்
ஆனால் உன்னை மட்டும்
புரிந்துக்கொள்ளும்
முயற்சியில்..,