ஓய்வின் நகைச்சுவை 96 வை காசியிலே

லக்ஷ்மி: என்னடி உன் வீட்டுக்காரர் ஏன் தை தைனு குதிக்கிறார்? போனிலே சத்தமா கேக்குறது

சித்ரா: தை மாசம் வர்றதில்லே, சுகர் இறங்கிடுச்சுனா தை தைனு குதிப்பார்

லக்ஷ்மி: அப்போ ஆடி மாசத்திலே ஆடு ஆடுனு ஆடுவாரா? பாவம்டி சித்திரே (சித்திரை) எப்படி சமாளிக்கிறே?

சித்ரா: கார்த்தி (கை)கேயா இவரை தூக்கிண்டு போய் “வை” “காசி”லேனு பிரார்த்திச்சுண்டு “ஐ” (ப்) பசி போக்கிறேன்னு போனை வைக்க வேண்டியது தான்

லக்ஷ்மி: ஆனி(ணி) அடிச்ப்பிலே சொல்றேடி. எதுக்கும் ம(மா)சிந்திராதே. ஆ. வாணியை பார்த்தா கேட்டதாக சொல்லு.

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (13-Jan-19, 6:55 am)
பார்வை : 119

மேலே