மாறும் சிந்தனைகள்
மனதில் தோன்றும்
மாறா சிந்தனைகள்
மாறும் மன ஓட்டங்கள்
எண்ணத்தில் பதித்து
வண்ணத்தில் குழைத்து
வடிவம் அமைத்து
ஓவியம் பதித்தேன்
என்னே ஆச்சரியம்
ஓவியம் உயிர் பெற்றது
என்ன நினைத்து
எனை வடித்தாய்
சூதுவாது நிறைந்த உலகில்
சூட்சமமாக நீ போராடு
சிலந்தி வலையில் நீ சிக்கி
சின்னா பின்னம் ஆகாதே
அடிக்கடி அல்லல்பட்டு
அலை போல்மாறி மோதாதே
கட்டுமரமாய் மாறிவிடு
கடலை எதிர்த்து சென்றுவிடு
நிலையில்லா உலகில்
நீ வாழ்வது போதாது
நீர்க்குமிழியாய் மாறாமல்
நீர் வீழ்ச்சியாய் மாறிவிடு
மாறும் சிந்தனைகள்
மன மாற்றத்தை ஏற்படுத்தும்
உன் பாதை உனக்கானது
யார் அதை பறிப்பது...???