செல்குடைவார் சங்கம்

முழிக்கிறான்...
முழிக்கிறாள்...
சிரிக்கிறான்...
சிரிக்கிறாள்...

அழைக்கிறான்...
அழைக்கிறாள்...
குழைகிறான்...
குழைகிறாள்...

ஒருகோடி அவனும்..
ஒருகோடி அவளும்...
செல்குடைவோர்.....

அதற்கு கோபுரம் வைக்கும்
கோப்பெருஞ்சோழனை...!
புரளவைக்கிறார் கோடிகளில்...

அன்பான அவனே...!
அன்பான இவளே...!

ஒற்றுமையாய் புதுக்கோபுரம்
பல அமைக்க மாதம்
பத்து ரூபாய் போதும்...

மூன்று வருடத்தில்
முச்சந்தியெங்கும் கோபுரமே...!
முயன்றுபார்
முடிவில் நீ நாயகனே...!

எழுதியவர் : ஷெரிப் (21-Jan-19, 2:15 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 442

மேலே