ஈமு கோழியின் குமுறல்
🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵
*சமுதாயக் கவிதை*
*கவிஞர் கவிதை ரசிகன்*
🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵
#ஈமு_கோழியின்_குமுறல்
எங்களை
வளர்ப்பதாகச் சொல்லி
வளர்த்தனர்
அவரவர்களின் வயிற்றை...
பறவைகளையும்
விலங்குகளையும்
வைத்து வாழவே பலர்
வழி தேடுகிறார்களே!
இவர்கள்
கையை வைத்து
காலாவது கழுவுவார்களா...?
எங்களை
பெரிய பெரிய பேனர்களில்
அச்சிட்டு வைத்தபோது
அக மகிழ்ந்து போனோம்...
இப்படி
பிறர் வயிற்றிலடித்து
பிழைப்பார்கள் என்று தெரியாது..
காட்டில் இருந்திருந்தால்
ஈமுகோழியாகவே இழந்திருப்போம்
இந்தக் கேடுகெட்ட
மனிதர்களோடு இருந்ததால்
பாவ கோழியாக இருக்கிறோம்...
பண்ணை வைத்து
எங்கள் பயனை பாரெல்லாம்
தெரிவிக்காமல் போயிருந்தாலும் கூட
பரவாயில்லை....
ஆனால்
பணையம் வைத்து
சூதாடி
பாவிகள்
எங்கள் பெயரை கெடுத்து விட்டார்களே!
அது சரி...
கேட்பவன் கேனையன் என்றால்
கேழ்வரகில் நெய் வடிகிறது என்பார்களே
இந்தப் பழமொழியை
யாரும்
கேள்வி பட்டதே இல்லையா ?
கவிதை ரசிகன்
🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵