நல்லோர் யார்
அன்னப்பறவையைப் பார்த்தேன்
வெள்ளை வாத்தையும் பார்த்தேன்
அன்னத்திற்குத்தான் பாலும் நீரும்
சேர்ந்த கலவையிலிருந்து பாலை
மட்டும் பிரித்தெடுக்க முடியும் என்றறிந்தேன்
அதுபோல தண்ணீரிலேயே முளைத்தெழும்
தாமரையின் பெரிய இலைகள் நீரிலிருந்தாலும்
ஒருபோதும் நீரை உறிஞ்சுவதில்லை நீர்
அதன்மேல் ஒட்டாது தனித்திருக்கும்
நல்லோரும் அப்படித்தான் நல்லதை மட்டுமே
தம்முள் ஏற்பர், நல்லதையே செய்து,பேசி,பழக
அந்த அன்னத்தைப்போல் , தாமரை இலைகளைப்போல்