காதல்
அவள் காதலின் பக்கத்தில் வந்து விட்டு
எட்டிப் பார்த்த படியே சென்றும் விட்டாள்
ஒரு புயலைப்போலவே வந்து போனாள்
உயிரை வேரொடு சாய்த்து போனாள்
உன் மனக்கதவை திறக்க சாவி ஏதும் உள்ளதா
என் மனக்கதறல் தீர்க்க சாமி ஏதும் உள்ளதா
உன் மனதிற்கு செய்வினை வைத்தது யார்
உன் மனதை செயல்படவிடாமல் செய்த்து யார்
நான் என்ன செய்து உன்னை சேருவேன்
நீ என்ன செய்தாலும் உன்னையே தேடுவேன்
என் காதல் மடிசேருமா??
மடிந்து போகுமா??
துணி சுற்றி தூக்கி எறியப்படுமா??