கடும் சோதனை எவ்வழி வரினும்

கம்பீரம் வரவேண்டும் மனதில்
நம் உருவம் கண்டு
கவலைகள் தீர வேண்டும் பிறருக்கு
நம் செயலைக் கண்டு
கடும் சோதனை எவ்வழி வரினும்
களைய வேண்டும் நாமே உறுதி கொண்டு
நம் குலத்தின் தலைவனே ஆயினும்
அவர் தவறு செய்தால்
நன்றாய் நாம் தண்டிக்கவேண்டும் அவரை
நடுகல் போல் நின்று- இன்றோ
தவறுக்கு விவாதம் செய்ய
ஊருக்கு ஒரு மன்றம் அமைத்து
நடந்த தவறுதனை விளக்குவதற்கு
ஆளை வைத்து தரமான சொல் சாரத்தலே
சல்லடை போல் தவறுக்கு ஓட்டை போட்டு
வெல்லுகின்ற முறையை அழித்தொழிப்போம் - பதிலாக
விளக்கம் அதை கேட்க ஒரு மேடை வைத்து
காரணமான இருவரை அழைத்து வந்து- தவறின்
காரணத்தின் உண்மை மூலம் அறிந்து
கடுமையான தண்டனையினை கொடுத்தோம் என்றால்
களையான குற்றங்கள் அழிந்தே ஒழியும்
-- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (24-Jan-19, 7:57 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 53

மேலே