நீ என்பது

நீ என்பது தேகம் மட்டும் அல்ல...
என் உயிரோடு
கலந்திருக்கும் சுவாசம்.......
ஆதலால் தான் உன்னை
சுவாசிக்கவும் செய்கிறேன்.....
எண்ணில்....
உணரவும் செய்கிறேன்......

விழியதனில் தேடலை தந்து விட்டு.....
கண்ணீர் துளிகளாய் வந்து
வதைப்பதும் ஏனோ......???
இதயத்தில் ஏக்கங்கள் தந்து விட்டு
எண்ணில் தான் இருக்கிறேன் என்று
உணரவும் வைக்கிறாய்.......!!
நீ என்பது வலியா....???
இல்லை .
இன்பம் துன்பம் தரும்....
நினைவுகளா...?????

சுவாசிக்கும் காற்றில்
உன்னை உணரவைக்கிறாய்....
நீ என்பது நினைவுகளா அல்லது காற்றா.......???

நித்தம் உன் முகம்
காண்கிறேன்.............
இருந்தும் விழிகளில் தேடல் தொடர்கிறது.....
நீ என்பது
தேடலா அல்லது
விழியோரம் கண்ணீர் துளிகளா.......???

பிறப்பின்
அர்த்தம் அறிந்தேன்.....
உன் சந்திப்பின்
பிறகு.....
இன்று
வாழ்வின் முடிவை
உணர்கிறேன்...
நீ பிரிந்த பின்னே....

அப்படியெனில்
நீ என்பது
வாழ்க்கையா???
அல்லது...
உயிரா.....??

வாழ்க்கை என்றபோதிலும்
உயிர்
என்ற போதிலும்...
இரண்டுமே
உன்னிடம் தான் உள்ளது...!!

மீண்டும் என் முன்னே
நீ தோன்றும் வரையிலும்....

நீ என்பது
விழியோரம் வரும் கண்ணீர்
துளிகள் மட்டும் அல்ல
உயிர் பிரியும் வரை
நான் சுவாசிக்கும்
மூச்சி காற்று தான்
நீ......!!!

எழுதியவர் : லீலா லோகிசௌமி (25-Jan-19, 6:47 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
Tanglish : nee enbathu
பார்வை : 545

மேலே