தனிமை சுவர்

மின்மினி பூச்சுக்கும்
தென்படாத
கருமை நிறம்
வாய்ந்த இரவு அது.....!!
நான்
மட்டும் அங்கே
முத்துக்கள் போல் பளிச்சிடும்
என் கண்ணீர் துளிகளோடு....!!
என் கண்ணீரின்
ஒளியை கண்டு
விடிந்ததோ...??
என்றெண்ணி
கொக்கரித்த என் வீடு சேவல்.....
தனிமை சுவர்
என்னை சுற்றி சிறை பிடித்திட....
இரவோடு
சேர்ந்து
நான் புலம்பியதை....
யார் அறிவார்.....
நாள் தோறும்
விழி நீரில் குளித்து
கொண்டு இருக்கும்
தலையனையே .....
உன்னை தவிர....

எழுதியவர் : லீலா லோகிசௌமி (25-Jan-19, 7:16 pm)
சேர்த்தது : லீலா லோகிசௌமி
Tanglish : thanimai suvar
பார்வை : 460

மேலே