தாய்மைக்கு சமர்ப்பணம்
இளந்தளிர் காற்றாய் கருவுற்று
பத்து மாதம் பயணம் கொண்டு
என்னை இன்னொருவனாய் மாற செய்து
புவிக்கு வந்தவளே!
நின் அன்னையின் வயிற்றினுள் நீ செய்த சிறு சிறு குறும்பும்
அவளுக்கு சந்தோஷத்தையும்
என்னுள் மன நடுக்கத்தையும் தந்தது
நீ பிறக்க அவளோ மறுபிறவி எடுக்க
அன்று மட்டுமே உனது அழுகை கண்டு o
அவள் சிரித்தாள்
குருதியில் உன்னையும்
கண்ணீரோடு இருந்த அவளையும் கண்டு மனம் கரைய
முன்பை விட இன்னும் அவளை நேசிக்க
இன்னொரு முறை அவள் தேகம் வருட மனமோ வெறுத்தது
பெண்களை அழகுப் பொருளாய் பார்த்த என்னை
அன்று உன்னால்
அவர்களின் தியாகத்தையும் உன்னதத்தையும் உணர்த்தி
கடவுளாய் பார்க்க செய்தாய்
அந்நொடி தான் உணர்ந்தேன்
என் தாய் எப்பேர்பட்ட போராளியென்று
வாழ்க பெண்மை
வாழ் அவர்கள் தியாகம்