தீயே உனக்கு தீ இல்லையா?
கொழுந்து விட்டு எரிந்தத்தீயே
கொழுந்துகளை விட்டு விட்டு எரிந்தாலென்ன?
தென்னங்கீற்றுகளே தொன்மையின் சின்னங்களே
சின்னஞ்சிறுசுகளின் சன்ன ஒலி கேட்கலையா?
சரிந்து விழுந்தீகளே
அரவணைக்கவா இல்லை அள்ளிக்கொல்லவா?
பொத்தி வளர்த்தபாலகனே
புரியாதபருவம் உனக்கு அறியாதவயது
புகை பிடித்தால் இறந்து போவாய்
புரியவைக்கஆசிரியர் இல்லை
ஆசானானது நெருப்பு
பாடமாகிப் போனாய் மக்களுக்கு.
ஊரு சனம் உறங்கலையே ஓலசத்தம் நிக்கலையே
மனம் கேட்கலையே என் சினம் ஆறலையே
தீக்கு அறிவு என்றபொருளில்லையா
தீயே உனக்கு தீயில்லையா?
அன்று கோவலன் இறக்கமதுரை எரிந்தது
இன்று கும்பகோணம் எரியகுழந்தைகள் இறந்தனர்
இரண்டிலுமே இறந்தவர்கள் குற்றமற்றவர்கள்.
குழந்தைத் தெய்வங்களுக்கு நினைவாஞ்சலி
பெற்றோர் உற்றாரின் கண்ணீரஞ்சலி
மற்றோரின் மலரஞ்சலி
வஞ்சகத்தீயும் கண்ணீர் விட்டது
மெழுகுவர்த்தியின் மேல் இருந்துகொண்டு.