காதல்

காதலை முதலில்
சொல்ல

தயக்கம் அங்கே
தடைவிதிக்கும்

காதலை கவிதையில்
சொல்ல

பொய்கள் அதிலே
அணிவகுக்கும்

காதலை காதலாய்
சொல்ல

மெல்ல நின்று
காதுகொடுக்கும்

காதலை காதலாள்
மெல்ல

புரிந்த பின்னே

காதலுக்கு என்ன
தடையிருக்கும்

எழுதியவர் : நா.சேகர் (2-Feb-19, 5:32 pm)
Tanglish : kaadhal
பார்வை : 528

மேலே