பொண்ணு அணிலான்னா பையன் எலியா

கண்ணுச்சாமி, துபாயிக்குப் போயி அஞ்சு வருசம் கழிச்சு வந்திருக்கிற. கலியாணம் பண்ணீட்டு போனவன் நம்ம ஊரையே மறந்துட்டே.
@@@@
வணக்கம் பெரிய. பாட்டிம்மா. அஞ்சு வருசம் அங்கயே இருந்தததாலதான் இப்ப அஞ்சு மாசம் நம்ம ஊருள்ள இருந்துட்டு வர அனுமதி குடுத்திருக்காங்க.
@@@@
உன்னோட மனைவி மங்கைக்கு
ரண்டு கொழந்தைங்க பொறந்திருக்கிற தகவல் மட்டுந்தான் எனக்குத் தெரியும். நீ தான் கொழந்தைங்க படத்தைக்கூட அனுப்பி வைக்கலயாமே. எங்கடா மங்கையும் கொழந்தைங்களும்?
@@@@@@
அவுங்க மூணு பேருக்கும் நேத்து இங்கு வந்ததிலிருந்து ஒடம்புக்குச் சரியில்லை. நாளைக்கு அழைச்சிட்டு வர்றேன் பெரிய.
பாட்டிம்மா.
@@@@@
சரி கொழந்தைங்க பேருங்களச் சொல்லுடா கண்ணுச்சாமி.
@@@@@
பொண்ணுத்தான் மூத்தவ. நாலு வயசு. பையனுக்கு ரண்டு வயசு. பொண்ணுப் பேரு 'அணிலா'...... பையன் பேரு...
@@@||
பொண்ணுப் பேரு 'அணிலா' (Wind)ன்னா, பையன் பேரு 'எலி'யா?
@@@@@
சரியாச் சொன்னீங்க பாட்டிம்மா. பையன் பேரு 'எலி' (Ascending)தான்.
@@@@@
ஏன்டா கண்ணுச்சாமி பெத்த புள்ளைங்களுக்கு அணிலு எலின்னெல்லாம் பேரு வைக்கிறதா?
@@@@@
தற்காலத் தமிழர் வழக்கமே வேற மொழிப் பேருங்களப் பிள்ளைகளுக்கு வைக்கிறதானே. நானும் மங்கையும் அதைத்தான் பின்பற்றினோம்.
@@@@@
என்ன இருந்தாலும் நம்ம தமிழ்ப் பேரு மாதிரி இருக்குமா? இந்த ரண்டு பேருங்களும் எந்த மொழில இருக்குது.
@@@@@
'அணிலா' இந்திப் பேரு. 'எலி' ஹீப்ரு, ஹங்கேரியன் ஆங்கில மொழில இருக்கிற பேரு.
@@@@@
சரி, சரி... மங்கை, இந்தி அணிலு, ஈப்ரூ எலியை எல்லாம் நாளைக்கு கூட்டிட்டு வா. அவுங்களா பாக்கணும்னு ஆசையா இருக்குது.
@@@@@
சரிங்க பாட்டிம்மா.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆◆
பிறமொழிப் பெயர்களைப் பெற்ற பிள்ளைகட்குச் சூட்டிப் பெருமிதம் கொள்வது தற்காலத் தமிழரின் நாகரீகம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (5-Feb-19, 5:16 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 59

மேலே