நெல்விளையும் பூமி

நெல்விளையும் பூமியே
உன் அழகை எப்படி விவரிப்பேன்
பருவ மழைத் தவறாது பெய்திட
உன்னை மழை நீர் ஊடுருவி
நனைத்திட , வந்து அங்கு
ஏர்முனையால் நிலமே உன்னை ஆழ உழுது

களை எடுத்து வடிநீர் வாய்க்காலும் கட்டி
நெல்விதைத்த விவசாயி பின்னே
நாத்து நட்டு , நெல்லுயர காத்திருப்பான்
வளமாய் நெல்லும் நிலமே உன்னில்
உயர உயர அவன் உள்ளமும் உயருதே

ஆஹா, நெல்லே நீ குமரிபோல
வளர்ந்து ஆளாகிறாய் முழுவதும்
பச்சையாய் பசுமையாய் தென்றல்
தாலாட்ட சதிராடுகிறாய் பார்ப்போர் உள்ளம் குளிர

பின்னர் உன் பசுமைநிறம் பொன்போல்
மஞ்சளாய் மாறுதே விந்தையாய்
முற்றிய நெற்கதிராய் நிலமெல்லாம் பரவி
இப்போது வீசும் பூங்காற்றில் நீ ஆடுகிறாய்
நெற்கதிர் தங்க ரதம்போல

நெல்விளையும் புரிய பூமியே
நெல்லை ஈன்று நெல்லுள் இருக்கும்
அரிசியை எமக்கு அன்னமாய்த் தந்து
வாழ்வாங்கு வாழவைக்கும் உன்னை
எப்படி போற்றுவேன் - நீதான் பூமித்தாய்
அண்ணப்போறணி, அன்னலக்குமி அம்மா.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Feb-19, 6:16 pm)
பார்வை : 303

மேலே