அனுதினமும் இரவுகள் விடியும்வரை சுகராகம்

அனுதினமும் இரவுகள் விடியும்வரை சுகராகம்
*************************************************************************

வானமது மஞ்சமாக விண்மீன்கள் மலர்தூவ
தேனமுது நிலவளிக்க தேவரின இளங்கனிகள்
கானமழை பொழிந்துநிற்க கட்டுடலோன் பாணங்கள்
வானவில் வழியேக கருங்கூந்தல் பாவையவள்
கோணாத நடைபயின்று நாணமுடன் தலைசாய்த்து
பேணும்அச் சொம்பினில் பசும்பாலோடு நெருங்கிவர
கணவனாய் நானெழுந்து சற்றேயவள் உடலணைக்க
தனமிரண்டின் சங்கமத்து நுகர்ந்தவர்கள் மகிழ்ச்சியில்
சணநேர இன்பங்கள் நெடுநேரம் தொடர்ந்திருக்க
அனுதினமும் இரவுகள் விடியும்வரை சுகராகம்
கனவாஇது நனவிலையோ என்றுநான் திகைத்திருக்க
மின்னலென அவள்வந்தாள் கனவிலுற்ற தாரகையாய்

எழுதியவர் : சக்கரைவாசன் (8-Feb-19, 9:49 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 169

மேலே