அறியாமை எனும் நிழல்

தெரிந்தும் தெரியவில்லை
அறிந்தும் அறியவில்லை
புரிந்தும் புரியவில்லை

நிழல்கள் நிஜங்களை
நிராகரிக்கும் பொழுது
நிகழ்வுகள் எல்லாம்
நினைவுகள் மறந்து
நிர்முலமாகிறது

நிர்வாணங்கள் நிழலாகும் பொழுது
படைப்பின் இரகசியங்கள் மறைந்து
ஆடைகளே அரசியல் செய்யும்

ஞானம் நிழலாகும் பொழுது
சித்தாந்தங்கள் சிலுவையில் அறையப்பட்டு

காலங்களின் கல்லறைகளாகும்


கடவுள்கள் நிழலாகும் பொழுது
கடப்பதற்கு ஏதுமின்றி
மதங்களின் அடிமையாவாய்

நீ உன் நிழலை
நின்று உற்று நோக்கு
நீ நீயாவாய்

எழுதியவர் : ஆழிசரன் (10-Feb-19, 1:11 pm)
சேர்த்தது : ஆழிசரன்
பார்வை : 120

மேலே