ஏமாற்றுக்காரனெல்லாம் மேல்சாதியாம்

ஏமாற்றுக்காரனெல்லாம் மேல்சாதியாம்
உழைக்கின்ற வர்க்கமெல்லாம் கீழ்சாதியாம்
ஆணுக்கு பெண்ணிங்கு சரிபாதியாம்
பணத்தை பொறுத்துதான் இங்கே நீதியாம்...!

விலங்கை விட உயந்த சாதி மனித சாதியாம்
ஒத்த இனத்திற்குள்ளே பிரிந்து கிடக்கு இலட்சம் கோடியாய்
ஏன் இந்த பாகுபாடு மனிதனுக்குள்ளேயே
ஆறாம் அறிவு இருந்த போதும் எந்த பயனுமில்லையே
ஏழாம் அறிவும் சுயநலமாய் மாறியதாலே...
நம்நாடு கெட்டு போச்சுடா பல அரசியல்வாதியாலே!

ஏமாற்றுக்காரனெல்லாம் மேல்சாதியாம்
உழைக்கின்ற வர்க்கமெல்லாம் கீழ்சாதியாம்
ஆணுக்கு பெண்ணிங்கு சரிபாதியாம்
பணத்தை பொறுத்துதான் இங்கே நீதியாம்...!

சாதியாம் சாதி எதற்கு இந்த சாதி?
ஓட்டுவாங்க மட்டும்தான் தேவை உனக்கு சாதி
உன் சாதி சங்கத்தினால் வாழ்வதிங்கு யாரு?
தன்னினத்தைதானே அழிக்க துடிக்குது ஊரு
சாதிகள் இல்லையென்று சொல்லிசென்றான் பாரதி
அந்த சாதிமட்டும் இல்லையென்றால் என்னாவான் அரசியல்வாதி?

மனிதனை அடிமையாக்கி இன்னும் வாழுதே
மனித நேயமெல்லாம் இன்று மடிந்துப் போனதே
சுயநலம் கூடியிங்கு பெரிகிப் போனதே
ஏழைக்கு மட்டும்தான் சட்டம் இருக்குதே
வாய்கிழிய பேசுறான் திருட்டுபயல் எல்லாம்
நாண்டுகிட்டு சாவதிங்கு விவசாயி மட்டும்தான்

சாதியாம் சாதி எதற்கு இந்த சாதி?
ஓட்டுவாங்க மட்டும்தான் தேவை உனக்கு சாதி
உன் சாதி சங்கத்தினால் வாழ்வதிங்கு யாரு?
தன்னினத்தைதானே அழிக்க துடிக்குது ஊரு
சாதிகள் இல்லையென்று சொல்லிசென்றான் பாரதி
அந்த சாதிமட்டும் இல்லையென்றால் என்னாவான் அரசியல்வாதி?

கேனப்பய ஊருல கிறுக்குபையன்தான் ஆளுவான்
படை வீரனைக் கோழையாக்கி அடிமைபடுத்துவான்
முட்டாளெல்லாம் ஒன்று சேர்ந்து
கொள்ளக்காரனை தலைவனாக்குவான்
பணமிருந்தால் போதும் அவன் சொல்வதுதான் வேதம்
தன்மானமுள்ள மனிதனெல்லாம் வாழ்வதிங்கு பாவம்

பொய் சொல்லி திரிவதுதான்
தலைவனின் உழைப்பாம்
உண்மையை மூடி மறைப்பதுதான் - பேரறிவாம்
ஜனநாயக நாட்டினில்
ஏமாற்றுவோர்தான் உயர்வாம்
மக்களாட்சி சட்டத்தில்
பிடிங்கி தின்பதுதான் வாழ்வாம்
பணக்கார வர்க்கத்திற்கு
மாமா வேலை பார்ப்பதுதான் தலைமை பொறுப்பாம்
நீதிக்கு புறம்பாத்தான் எப்போதும் நடப்பான்
பணமிருந்தால் போதும் அவன் சொல்வதுதான் வேதம்
தன்மானமுள்ள மனிதனெல்லாம் வாழ்வதிங்கு பாவம்

உழைக்கின்ற வர்க்கமெல்லாம் கீழ்சாதியாம்
ஏமாற்றுக்காரனெல்லாம் மேல்சாதியாம்
ஆணுக்கு பெண்ணிங்கு சரிபாதியாம்
பணத்தை பொறுத்துதான் இங்கே நீதியாம்...!

விலங்கை விட உயந்த சாதி மனித சாதியாம்
ஒத்த இனத்திற்குள்ளே பிரிந்து கிடக்கு இலட்சம் கோடியாய்
ஏன் இந்த பாகுபாடு மனிதனுக்குள்ளே
ஆறாம் அறிவு இருந்த போதும் எந்த பயனுமில்லை
ஏழாம் அறிவும் சுயநலமாய் மாறியதாலே...
நம்நாடு கெட்டு போச்சுடா பல அரசியல்வாதியாலே!

எழுதியவர் : கிச்சாபாரதி (12-Feb-19, 7:54 pm)
பார்வை : 46

மேலே