ஓர விழிப் பார்வை
ஓர விழிப் பார்வையில்...
ஓராயிரம்.... கனவுகள் கொடுத்தவள்..
ஓடாத நதிக்கரையில்...
உதடு ஒத்தடம் கொடுத்தவள்...
ஊராரின் வார்த்தைக்கு...- என்னை
ஊமையாக்கிச் சென்றாளோ..?
காலடிச் சத்தத்தை கொண்டு..
வரவை அறிந்தவள்... - என்னிடம்
தனிப்பார்வை கொண்டு...
தனி மொழி பேசியவள்...
கலைந்து போன காரணத்தை...
ஓரப்பார்வையால் சொல்லியிருக்கலாமே...?!
கண்களுக்காவது விடைகொடுத்திருப்பேன்...
கனவுகள் காண்பதற்கு....