அரசியல் தரகர் அபயரத்தினா

அரசியல் தரகர் அபயரத்தினா
பொன் குலேந்திரன் (கனடா)
முன்னுரை:
சென்ற வருடம் ஒக்டோபர் மாதம் வரை அமைதியாக இருந்த இலங்கையில், திடீர் என்று அரசில் புயல் தோன்றித் தாக்கியது . நாட்டின் ஜனாதிபதி எடுத்த முடிவு நாட்டின் சாசனத்துக்கு எதிரானது என எழு நீதியரசர்கள் கொண்ட நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தப் புயல் நாட்டின் பொருளாதாரத்தையும், வெளிநாடுகள் இலங்கை மீது வைத்திருந்த மதிப்பையும் வெகுவாகப் பாதித்தது. கொடிக்கணக்கான பணம் செலவு செய்து எம் பி மாரை விலைக்கு வாங்கும் நாடகம் நடந்தது. அதைக் கருவாக வைத்துப் புனைவு கலந்து எழுதப் பட்ட கதை இது. இக் கதையில் வரும் பெயர்கள் எவரையும் குறிப்பிடப்படவில்லை
****

புகையிலை, வெங்காயம் , வாகனம் . திருமணம் , வீடு, காணி. மொர்ட்கேஜ் என்று கொமிசனுக்கு தரகு வேலை பார்த்து வாழ்பவர்கள் பலருண்டு . இவர்கள் பேச்சு வல்லமை உள்ளவர்கள். உண்மைக்கும் இவர்களுக்கும் வெகு தூரம் . தரகில் கிடைக்கும் பணம் அவர்கள் கெட்டித்தனத்தைப் பொறுத்தது.

ஒரு நாட்டில் அதன் சாசனத்துக்கு எதிராக அந்த நாட்டின் ஜனாதிபதி, மந்திரி சபையை கலைத்து நாட்டில் அரசியல், பொருளாதார போன்ற பல பிரச்சனைகளைத் தோற்றுவித்தார். அவருக்கு ஆதரவாக ஒரு கூட்டமும், ஒரு வெளி நாட்டின் மறைமுக ஆதரவும் இருந்தது. இதனால் பயன் அடைந்தவன் அரசியல் தரகன் அபயரத்தனா . அவனுக்கு நாட்டுப் பற்று பற்று கிடையாது . பணப் பற்று அதிகம். கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடாதவன், பிறரின் பலவீனத்தை அறிந்தவன் அரசியலில் ஆட்சி அமைக்க உதவித் தேடி வரும் கட்சிக்கு அபயம் கொடுக்கும் அரசியல் தரகன் அபயரத்தினா.
அவன் தான் இந்தக் கதையின் கதாநாயகன். நாம் அவனை அபயம் என்று அழைப்போம்.
அபயம் இலங்கையில் குருணாகல் என்ற நகரில் பிறந்தவன். சாணக்கியன் . அந்த நகரில் உள்ள முக்கிய அரசியல் புள்ளி ஒருவருக்குப் பல தென்னம் தோட்டங்களும், வீடுகளும் உண்டு. அவரின் வீட்டில் வேலைக்காரனாக ஆரம்பித்து தனது திறமையால் பதவி உயர்வு பெற்று தொட்டத்தில் தேங்காய் பிடுங்கிப் பிழைத்தவன் அபயம் விற்கும் தேங்காயில் ஐந்து விகிதம் அவனுக்கு கொமிசனாக கிடைத்து விடும்.
தோட்ட முதலாளி குணரத்தினா ஒரு அரசியல்வாதி. படிப் படியாக நாட்டின் உயர் பதவியை அடைந்து நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டி, உலகில் உள்ள பெரும் பணக்காரர் பட்டியலில் ஒருவரானார். நடிக்கத் தெரிந்தவர். மூன்று மொழிகளும் பேசத் தெரிந்தவர் . அவருக்கு இலங்கையின் பொருளாதா ரத்தை சுரண்ட உதவியது ஒரு வெளி நாடு. பிரபல அரசியல் கட்சியின் தலைவர் அவர். நான்கு சகோதர்கள். அவர்களும் அவரின் கட்சியில் அங்கத்தினர்கள். .
****
தனக்குப் பிரதமந்திரியோடு கருத்து வேற்றுமையால் ஒத்து செயல் பட முடியாது, அதோடு தன்னைக் கொலை செய்யத் திட்டம் போட்டவர்களைப் போலீசை கொண்டு பிரதம மந்திரி சரிவர விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை, மத்திய வங்கி ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளை வைத்து நாட்டின் சாசனத்துக்கு எதிராக மந்திரி சபையை கலைத்து, தன் நண்பர் குணரத்தினாவை பிரதம மந்திரியாக நாட்டின் தலைவர் நியமித்தார். இது நாட்டின் தலலைவருக்கும் குணரத்தினாவுக்கும் இடையேலான மறைமுக உடன்படிக்கை. நாட்டின் சாசனத்தின் படி குணரத்தினா தனக்கு பாரளுமன்றத்தில் தான் பிரதமராக இருக்க தனக்குப் பெரும்பான்மையான ஆதரவு இருக்கிறது என்று நீருபித்து ஆக வேண்டும். அதன் பின்னரே அவரின் நியமனம் நாட்டின் சாசனத்தின் படி ஏற்றுக் கொள்ளப்படும் . ஆனால் அவருக்குப் பெரும்பான்மையான ஆதரவு உள்ளது என்பதை நீருபிக்க ஆறு எம்பிகளின் வாக்குகள் தேவைப் பட்டது . பெரும்பான்மை உள்ள கட்சியில் இருந்து ஆறு எம்பிகளை விலைக்கு வாங்க தன் சகோதரர்களோடு சேர்ந்து திட்டம் போட்டார் குணரத்தினா. இதற்கு தங்கள் தென்னம் தோட்டத்தில் வேலை செய்யும் அபயரத்தினாவை புரோக்கராக பதவி உயர்த்தி, தங்கள் திட்டத்துக்குப் பாவிக்க முடிவு எடுக்கப் பட்டது. அபயம் பேச்சு வல்லமை உள்ளவன். தன் பேச்சினால் எதிரியையும் கவரக் கூடியவன். ஏற்கனவே தேங்காய் புரோக்கர் வேலை செய்த அனுபவம் உள்ளவன். அவனுக்குத் தெரியும் விலைக்கு ஒரு எம்பி யை வாங்கினால் அவர்களுக்குக் கொடுக்கும் பணத்தில் ஐந்து விகிதம் தேங்காய் வியாபாரத்தில் கிடைக்கும் கொமிசன் போல் அவனுக்கு தரப் படும் எனத் திட்டம் போட்டவர்கள் அவனுக்கு உறுதி செய்தார்கள். தரகு வேலை முடிந்ததும் அவனுக்கு மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலையும் எடுத்துத் தருவதாக வாக்குறுதி கொடுத்தனர். அவர்கள் விரித்த வலையில் அபயம் விழுந்தான் .

ஆரம்பத்தில் ஒரு கோடி ரூபாயில் பேரம் ஆரம்பித்து ஆளுக்கு ஐந்து கோடியில் ஆறு பேருக்கு முடித்த கெட்டித்தனம் அபயத்தைச் சேர்ந்தது. பேரத்தின் முடிவில் அபயத்துக்கு 1.5 கோடி ரூபாய் கொமிசனாக வாக்கெடுப்பு முடிந்து குணரத்தினா வென்ற பின் அபயத்துக்கு பணம் தருவதாகச் சொல்லப் பட்டது . அந்தப் பெரும் தொகையான பணத்தை அபயம் அவன் வாழ்வில் கண்டதில்லை. வாக்கெடுப்பு நடந்து முடிந்த பின்னர் துபாயில் வேலை ஒன்றுக்கு அனுப்புவதாகத் திட்டம் போட்டவர்கள் அபயத்துக்குச் சொன்னார்கள்.
****
அன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாராளுமன்றம் கூடியது நாட்டின் சாசனத்துக்கு எதிராக புதிதாக நியமிக்கப்படப் பிரதம மந்திரி குணரத்தினாவின் மெல் நம்பிக்கை இல்லாப் யி பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப் பட்ட போது குணரத்தினா இரு வாக்குகளாளல் தோல்வி அடைந்தார் . அவரின் சகோதரர்கள் அதை எதிர்பார்க்கவில்லை.
அபயத்தை தம் அறைக்குள் அழைத்து விசாரித்த போது
“நான் அவர்களுக்கு பணம் கொடுத்து அவர்கள் உங்கள் சகோதரருக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று சம்மதித்து கையழுத்து இட்ட ஒப்பந்தங்கள் இதோ. வாக்கெடுப்புக்கு முன் அவர்களைப் பாதுகாப்புடன் ஹோட்டல் ஒன்றில் வைத்திருந்தேன். அவர்கள் வெவ் வேறு கார்களில் வாக்கெடுப்புக்கு பாராளுமன்றத்துக்கு வரும் போது அந்த விபத்து நடந்து விட்டது “ அபயம் சொன்னான்.

“என்ன விபத்து “?

“ அந்த ஆறு பேரில் இருவர் வந்த கார் ஒரு பெரிய லொறியோடு மோதி அந்த இடத்திலே அவர்கள் இருவரும் மரணம் அடைந்தார்கள் . உங்கள் அண்ணரை விதி சதி செய்து விட்டது சேர். உங்கள் அண்ணர் தோழ்வியடைய வேண்டும் என்று அவர் தலையில் எழுதி வைத்திருக்கிறது. அதை எவராலும் மாற்ற முடியாது” என்றான் அபயம்.

“உனக்கு இனி எங்கள் சகோதரரின் தோட்டத்தில் வேலை இல்லை வேறு இடத்தில் வேலை தேடு” என்றார் குணரத்தினாவின் சகோதரர் ஒருவர் .
அபயம் பதில் சொல்லாமல் அறையை விட்டு வெளியேறினான்,

*****

வாக்கெடுப்பு நடந்து ஒரு சில நாட்களில் குணரத்தினாவின் சகோதர்களுக்கு அவர்கள் எதிர்பாராத செய்தி ஓன்று கிடைத்தது அரசியல் புரோக்கராக செயல் பட்ட அபயரத்தினா , குணரத்தினாவுக்கு எதிராக வாக்களித்த கட்சியின் உதவியோடு மத்திய கிழக்கு நாடு ஒன்றில் டிரைவர் வேலை கிடைத்து போய் விட்டான் என்பதே அந்தச் செய்தி .

(யாவும் புனைவு)

எழுதியவர் : Pon Kulendiren (16-Feb-19, 5:06 am)
பார்வை : 118

மேலே