திருதிரு மகள்
வாடி திருமகள். நல்ல இருக்கிறயா?
@@@@
நல்லா இருக்கிறேன் பெரியம்மா. அண்ணன் அக்கா எல்லாம் நல்லா இருக்கறங்களா?
@@@
நாங்க எல்லாம் நல்லா இருக்கிறோம். நம்ம ஊருப் புள்ளைங்கள்ல உம் பேருதான்டி எனக்கு ரொம்ப பிடிச்ச அழகான பேரு.
@@@@
அந்த அழகா என் கணவருக்குத் தெரிலீயே பெரியம்மா.
@@@@
உம் பேருக்கு என்னடி கொறைச்சல்?
@@@
எம் பேரு தூய தமிழ்ப் பேரா இருக்கறது அவருக்குப் பிடிக்கலையாம். அதனால அவரு என்னை '"திருதிரு மகள்"னு தான் கூப்புடுவாரு. "தூய தமிழ்ப் பேரு வைக்கறதெல்லாம் தமிழர்கள் மறந்துட்டாங்க உம் பேரை "ஶ்ரீமகள்" னு மாத்திக்கிறதுதான் நல்லதுன்னாரு. நீ அப்படி மாத்திக்கிற வரைக்கும் உன்னை "திருதிரு மகள்"-னுதான் கூப்புடுவேன்"னு சொல்லிட்டாரு பெரியம்மா. திருமகளா புகுந்த வீட்டுக்குப் போனவ இப்ப ஶ்ரீமகளா பொறந்த வீட்டுக்கு வந்திருக்கிறேன்
@@@@@
உன் வீட்டுக்காரன் புத்திகெட்ட மனுசனா இருப்பான் போல இருக்குதடி திருமகள். ஶ்ரீமகளாம் ஶ்ரீமகள்.