மாயை வாழ்க்கை
சோதனையைத் தாங்கும்
இதயத்திற்குத் தோன்றுமே
ஒரு கனம்
கூட்டை விட்டு உயிர்
பிரிந்தால் என்ன...
வாழ்வில் விண்ணைத்
தொட்டவன் எவரவரோ,
நாளை மண்ணைச்
சேர்பவனும் அவரவரே...
நேற்றைய சிந்தனை வேண்டாம்...
நாளைய கற்பனையும்
வேண்டாம்...
இன்றைய விடியலே
உண்மை ... வாழ்ந்து
போய்ச் சேரலாம்
ஆண்டவன் மடியில்...