பெண்களின் கால்கள்------------------------இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் -
வணக்கம்
எப்படி இருக்கீங்க??.
எல்லா பதிவையும் இதே மாதிரி ஆரம்பிக்கிறது எனக்கே அலுப்பா இருக்கு சார். எழுதுற எனக்கே அலுப்பு'னா, படிக்கிற உங்களுக்கு??. கவலைப்படாதீங்க சார் அடுத்ததடவை மலையாளத்தில் ஆரம்பிக்கிறேன். இப்பொழுதுதான் ஒரு அழகான பெண் மலையாளம் சொல்லி தர ஆரம்பித்து இருக்காள், எப்படியாவது மலையாளத்தை பிக்கப் பண்ணிடலாம்'னு நினைக்கிறேன்.
அழகான பெண் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்ன சார்??. பெண் என்றாலே அழகு தானே. ஒரு பெண்ணை அழகு, அழகில்லை என்று எதை வைத்து எடை போடுகிறார்கள். குமார் சொல்வான் " நேருக்கு நேர்" படத்தில் வரும் சிம்ரன்தான் உண்மையான உலக அழகி என்று. இவன்தான் ஒருமுறை "அலைகள் ஓய்வதில்லை" திரைப்படத்தை பார்த்துவிட்டு, தூக்கத்தில் அன்று இரவு முழுவதும் "அமலா", "அமலா" என்று புலம்பிக்கொண்டு இருந்தான், நான் அவனை எழுப்பிவிட்டு அது "அமலா" இல்லை, "ராதா" என்றேன். அவன் "பெயரில் என்ன இருக்கிறது" என்று சொல்லி மீண்டும் கனவுகான தொடங்கிவிட்டான்.
அவன் சொல்வது சரிதான் சார். பெயரில் என்ன இருக்கிறது. எல்லாமே உடையிலும் நடையிலும்தான் இருக்கிறது.
நீங்கள் பெண்களின் கால்களை கவனித்து இருக்கிறீர்களா??. நான் எல்லா பெண்களிடமும் முதலில் பார்ப்பது அவர்கள் கால்களைத்தான். பின்புதான் மற்றவை எல்லாம். பெண்களின் கால்விரல்கள்தான் எத்தனை அழகு!!, அதுவும் அந்த சுண்டுவிரல்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். "விண்ணைத்தாண்டி வருவாயா" திரைப்படத்தில் கூட சிம்பு, திரிஷாவின் சுண்டுவிரலைத்தான் முதலில் பிடிப்பான்.
பெண்கள் தங்கள் முகத்தை போலவே கால்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். கால்களை அழகாக வைத்துகொள்ள எப்பொழுதும் விரும்புகிறார்கள். அதற்காக ஏதோ, ஏதோ மருந்துகள் எல்லாம் கால்களில் போட்டுக்கொள்கிறார்கள். முகத்தில் தேமல் வந்தால் கூட அதிகம் கவலைப்படாத பெண்கள், கால்களில் வெடிப்பு வந்தவுடன், ஏதோ தங்கள் அழகே போய்விட்டது போல் வருத்தப்படுகிறார்கள்.
சார், நீங்கள் கால்களிள் மருதாணி வைத்திருக்கும் பெண்களை பார்த்து இருக்கிறீர்களா??. அவள் கையில் இருக்கும் மருதாணியைவிட காலில் இருக்கும் மருதாணி அழகாகயிருக்கும். எதற்காக பெண்கள் தங்கள் கால்களை எப்பொழுதும் அழகாக வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள்?? ஒருவேளை என்னைப்போலவே பெண்களின் கால்களை ரசிப்பவர்கள் பல பேர் இருக்கிறார்களா??
"நாம் ஒருவனால் கவனிக்கப்படுகிறோம் என்ற விஷயத்தை பெண்களின் ஆழ்மனது சுலபமாக கண்டுக்கொள்கிறது". யாரவது பார்க்கும்போது, தானாகவே பெண்ணின் கைகள் அவள் ஆடையை சரிசெய்யும். அது போல, நாம் பெண்ணின் கால்களை பார்க்கும் போது, தானாகவே எதன் பின்னாலாவது அவள் கால்களை மறைத்துக்கொள்கிறாள்.
நான் பெண்களின் கால்களை ரசிக்க தொடங்கியது எப்பொழுது இருந்து என்று சரியாக ஞாபகம் இல்லை சார். கண்டிப்பாக கடந்த இரண்டு வருடங்களாகதான். ஒருவேளை மனுஷ்யபுத்திரனின் "கால்களின் ஆல்பம்" கவிதையின் பாதிப்பாகக்கூட இருக்கலாம்.
குமாரிடம் இதைப்பற்றி கேட்டேன் சார், " நீ பெண்களில் கால்களை பார்ப்பியா??" என்று, "நம்மை செருப்பால் அடிப்பார்களோ??, என்று சந்தேகம் வரும்பொழுது மட்டும் பார்ப்பேன்" என்றான்.
ஒரு பெண், தனது கால்களில் அணிந்திருக்கும் காலணியை பார்த்தே அவளைப்பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ளலாம் சார். இது உண்மை சார். நீங்களே வேண்டுமானால் சோதித்து பாருங்கள், ஹை ஹீல்ஸ் அணிந்திருக்கும் எல்லா பெண்களும் ஒரே மாதிரி இருப்பார்கள். போன வாரம் எங்கள் அலுவலகத்தில் இலவசமாக கொடுத்த டீ-சர்ட் large Size'ல் இருந்ததால் மாற்ற போயிருந்தேன் சார். அப்பொழுது அங்கே வந்த பொண்ணு ஒண்ணு, அவள் கையில் மடித்து வைத்திருந்த புதிய டீ-சர்டை விரித்து காட்டி, "I am having large, but I want small" என்றாள். அப்பொழுதுதான் அவள் கால்களை பார்த்தேன் எவ்வளவு பெரிய ஹை ஹீல்ஸ் தெரியுமா??
சரி , மீண்டும் அடுத்த பதிவில் இதைப்போல் நாட்டுக்கு தேவையான கருத்துகளுடன் சந்திப்போம்.
சரவணாவின் பதிவுகள்
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
6 விமர்சனங்கள்
தனி காட்டு ராஜா said...
//நான் அவனை எழுப்பிவிட்டு அது "அமலா" இல்லை, "ராதா" என்றேன். அவன் "பெயரில் என்ன இருக்கிறது" என்று சொல்லி மீண்டும் கனவுகான தொடங்கிவிட்டான்.//
பெயரில் ஒன்றும் இல்லை சரவணா .......என் ஞானக் கண்ணை திறந்து விட்டாய் சரவணா ...
ஆனால் ராதா என்ற பெயருக்கு ஒரு விசேசம் உண்டு ..... ரா -என்றால் காதல் ,ரா-தா என்றால் காதலை தருபவள் ....
//நீங்கள் பெண்களின் கால்களை கவனித்து இருக்கிறீர்களா??. நான் எல்லா பெண்களிடமும் முதலில் பார்ப்பது அவர்கள் கால்களைத்தான்.//
நான் கால்களை கவனித்தது இல்லை சரவணா ..... முகத்தை பார்த்த பின் கழுத்துக்கு கீழ் பார்ப்பது தான் என் வழக்கம் ... 98% ஆண்களின் வழக்கம் ......சில பெண்கள் முகம் சரியில்லை என்றால் கூட மார்பு வனப்பாக இருந்தால்[நமிதா ] கண் இமைக்காமல் சில கணங்கள் பார்ப்பதுண்டு..... [வில்லேன்டா..........]
ஆனால் என்னை பொறுத்தவரை பெண்மை நிறைந்த பெண் என்றால் அவள் விழி ,வெக்கம் இந்த இரண்டையும் சொல்லலாம்....ரசிக்கலாம் .....
//அப்பொழுது அங்கே வந்த பொண்ணு ஒண்ணு, அவள் கையில் மடித்து வைத்திருந்த புதிய டீ-சர்டை விரித்து காட்டி, "I am having large, but I want small" என்றாள். அப்பொழுதுதான் அவள் கால்களை பார்த்தேன் எவ்வளவு பெரிய ஹை ஹீல்ஸ் தெரியுமா??//
ஒன்னு நல்லா தெரியுது சரவணா ....நீ எதை பார்க்கணுமோ அதை பார்க்கமாட்டாய் என்று .....
October 11, 2010 at 10:36 PM
சரவண வடிவேல்.வே said...
///.சில பெண்கள் முகம் சரியில்லை என்றால் கூட மார்பு வனப்பாக இருந்தால்[நமிதா ] கண் இமைக்காமல் சில கணங்கள் பார்ப்பதுண்டு///
என்ன கோபி இப்படி படக்'னு சொல்லிட்டீர்கள்.. பெண் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சுற்றிக்கொண்டு இருக்கும் சில வலைப்பதிவாளர்கள் படித்தால் நம் நிலைமை என்னாவது??
சொல்லமுடியாது நாளைக்கு உங்கள் வீட்டுக்கு ஆட்டோ வரலாம். அப்படி எதாவது பிரச்சனை என்றால் உடனே எனக்கு தெரியப்படுத்தவும். நான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கொள்வேன். :)
-----------------
தனி காட்டு ராஜா said...
//என்ன கோபி இப்படி படக்'னு சொல்லிட்டீர்கள்.. பெண் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சுற்றிக்கொண்டு இருக்கும் சில வலைப்பதிவாளர்கள் படித்தால் நம் நிலைமை என்னாவது??//
பெண் பாதுகாவலர் வலை பதிவர்கள் எல்லாம் பெண்கள் மத்தியில் தன்னுடைய இமேஜ் -யை உயர்த்தி காட்ட தான் பில்ட் - அப் கொடுப்பார்கள் ...நெஜமா அவனுக பக்கத்துல இருந்து பார்த்தா தான் தெரியும் ......பெண் காவலரா ?கோவலரா என்று !!!
---------------
Subramania Athithan said...
பெண்களின் உண்மை அழகு கண்களில் இருக்கு நண்பா :) leg ok. have u seen gals walking style. hardly some gals will hav it gud. if u dont believe chk trisha's in the same movie ;)
"I am having large, but I want small" என்றாள்" i know who is dat. aha ithuthan punaiva :) பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே எழுத
----------
சரவண வடிவேல்.வே said...
//**i know who is dat. aha ithuthan punaiva **/
வாழ்க்கை என்பதே அனுபவம் தானே :)...
//**பெண்களின் உண்மை அழகு கண்களில் இருக்கு நண்பா**/
எனக்கு எப்பொழுதும் மற்றவர்களின் கண்களை பார்த்து பேசுவதுதான் பிடிக்கும் நண்பா.
நீங்கள் ஒருவரின் கண்களை பார்த்து பேச வேண்டுமானால், நீங்கள் எந்த ஒரு பொய்யும் இல்லாமல், உள்மனதில் இருந்து பேசவேண்டும்.
ஏனோ என்னால் அப்படி பேச முடியவில்லை. ஒரு பெண்ணின் கண்களை பார்த்து பேசும்போது என்னை அறியாமல் எனக்குள் ஒரு குற்றவுணர்ச்சி வந்துவிடுகிறது.
நம்மை நம்பி பேசும் ஒரு பெண்ணை ஏமாற்றுகிறோமே எனற குற்றவுணர்ச்சி அது.