காதலே நிம்மதி
அண்ணே
என்னடா சொல்லு
நான் சொல்லுவண்ணே சொன்னா நீங்க என்னைய கேலி பண்ணக்கூடாதுண்ணே
சரி சொல்லு
நான் ஓரு கவிதை எழுதி இருக்கண்ணே
என்னது நீ கவித எழுதி இருக்கியா ? ஏண்டா நீ தப்பில்லாம தமிழே படிக்க மாட்ட
நீயெல்லாம் கவித ,எல்லாம் நேரம்டா சரி சரி தலைப்பென்ன ?
காதல்ணே
என்னாது காதலா ? அதப்பத்தி ஒனக்கென்னடா தெரியும்
அண்ணே கேலி பண்ணமாட்டேன்னீங்க
சரி சரி கோச்சீக்காம சொல்லு
ஐஸ்கிரீம்
திருமணத்திற்கு முன்பு
மிளகாய்
திருமணத்திற்குப் பின்பு
என்னடா இது ஐஸ்கிரீம் , மொளகான்னு காதலுக்கும் இதுங்களுக்கும் என்னடா சம்பந்தம் ?
என்ன புரியலீயாண்ணே
ஆமா பெரிய வெண்பா பாடியிரூக்க வெளக்கெண்ண புரியாம போச்சு வெளக்கத்த சொல்லித் தொல
ஐஸ்கிரீம் சாப்டா எப்பிடீண்ணே இருக்கும் ?
ஏன்டா சும்மா ஜிலுஜிலு ,குளுகுளுன்னு இருக்கும்
அதை சாப்பிடாட்டீ ஏதாச்சும் நஷ்டமாண்ணே
சே சே அப்பீடீல்லாம் இல்லடா
மொளகா எப்பீடீண்ணே ?
காரமாத்தான்டா இருக்கும் இது கூடவா தெரியாது கேள்வீய பாரூ கேனையனாட்டம்.
சரிண்ணே அது இல்லாம எத்தினி வேள சாப்பிடூவண்ணே
சும்மா காரஞ்சாரமா சாப்புட்டாதான்டா சாப்பாடு , இல்லன்னா அது பத்திய சோறாயிடுமேடா அத்த ஒரு நாளைக்கு மேல மனுசன் திண்ண முடியுமா ?
சரிதாண்ணே அப்ப நீயும் ஐஸ்கிரீம பத்தியும் மொளகாய பத்தியுந்தாண்ணே சொல்ற
டேய் நா எங்கடா அத பத்தி சொன்ன
இப்பத்தான் ஐஸ்க்ரீம் இல்லாம இருக்கறது ஒன்னுமில்ல மொளகா இல்லாம இருக்கவே முடியாதுன்னு சொன்னீங்க
ஆமா நீ கேட்ட அதுக்கு நாஞ் சொன்னே
அதத்தாண்ணே நா அப்டி சொல்றேன்
எதை எப்டி சொல்ற
கல்யாணத்துக்கு முன்னாடி காதல் இல்லாம கூட இருக்கலாம் ஆனா கல்யாணதுக்குப் பின்னாடி காதல் இல்லாம இருக்கவே கூடாதுன்னு
டேய் இரு எனக்கொரு சந்தேகம் இந்த கல்யாணத்துக்கு அப்புறம் காதல் இருக்கனும்னு சொல்றீயே அது யார் கூடடா ?
அண்ணே நீங்க ரொம்ப வெஷமம் புடிச்ச ஆளுண்ணே
சும்மா கிண்டல் பண்ணேன்டா .
சரி வரண்ணே அப்பறமா பாக்கலாம்
சரிடா.