சிவப்பு விளக்கு

நான் அமெரிக்க மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மனேஜராகப் பதவி உயர்வு பெற்று, சென்னையில் இருந்து மூம்பாயுக்கு மாறுதல் கிடைத்து,
எனது மனைவி ஜமுனாவோடும் மகள் காவேரியோடும் போய் ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது . சென்னையில் எனக்கு சீதனமாகக் கிடைத்த வீட்டில் என் மாமனார் குடும்பத்தோடு சந்தோசமாக வாழ்ந்தவன் நான் .
என் மாமனார் குடும்பத்துக்கு என் மனைவி ஜமுனா ஒரே மகள். கட்டுபாட்டுடன் வளர்ந்தவள். நான் வேறு பெண்களோடு சிரித்துப் பேசுவது அவளுக்குப் சிறிதளவும் பிடிக்காது. நான் அவளுக்கு மட்டுமே என்ற போக்குள்ளவள். எனது ஒழுக்கத்தில் என் மாமனார் குடும்பத்துக்கும் அவர்களின் உறவினர்களுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது.

இதற்கு முன் வேலை நிமித்தம் இரண்டு நான் மூம்பாயுக்கு இரு தடவை போய் சில நாட்கள் தங்க வேண்டி இருந்தது. அப்போது கொம்பனி டிரைவர் ஹோட்டலுக்கு வந்து என்னை அழைத்துச் சென்று திரும்பவும் கூட்டி வந்து விடுவான். எனக்கு விரும்பிய இடத்துக்கு கூட்டி செல்வான் பதவி உயர்வு பெற்று மூம்பாயுக்குப் போன போது, . மூன்று அறைகள் உள்ள அப்பார்ட்மென்ட், கார், என் மகளுக்கு கல்விச் செலவு, என் குடும்பத்துக்கு வைத்திய செலவு, வருடத்தில் மூன்று கிழமை லீவு போன்ற சலுகைகள் எனக்கு கிடடைத்தது . நான் வசித்தது மலபார் ஹில் என்ற உயர் மட்டத்து மக்கள் வாழும் பகுதி.

என் மாமனார் வீட்டுக்கு போக ஜானகியையும், காவேரியையும் சென்னைக்குப் போகும் காரைக்கால் எக்ஸ்ப்ரஸில் இரவு ஏற்றி விட்டு என் காரில் வீடு திரும்பும பொது மழை சோ வென்று பெய்யத் தொடங்கியது.

. மூம்பாயில் அடிக்கடி திடீரென மழை பெய்யும் என்று ஆபிசில் வேலை செய்தவர்கள் சொன்னார்கள், எனது காரின் வைப்பர் வேகமாக இயங்கிக்கொடிருந்தது . பாதையில் அதிக கார்கள் இருக்கவில்லை . நான் வீட்டுக்குத் திரும்பினால் அங்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள். ஜமுனா சென்னையில் இருந்து திரும்பும் மட்டும் எனக்கு சாப்பாடு வெளியில்தான். எனக்கு காப்பி போடத்தெரியும். ரோட்டிக்கு ஜாம் பூசி முட்டை பொரித்து சாப்பிட எனக்கு

எழுதியவர் : பொன் குலேந்திரன் (கனடா) (20-Feb-19, 7:43 pm)
Tanglish : sivappu vilakku
பார்வை : 430

மேலே