தாழ்ந்தாலும் மேன்மக்களே சிறந்தவர் - மூதுரை 18

இன்னிசை வெண்பா

சீரியர் கெட்டாலும் சீரியரே சீரியர்மற்(று)
அல்லாதார் கெட்டாலங்(கு) என்னாகும் - சீரிய
பொன்னின் குடமுடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடமுடைந்தக் கால். 18 - மூதுரை

பொருளுரை:

மேன்மக்கள் வறுமை அடைந்தாலும் மேன்மைக் குணத்துடனேயே இருப்பார்கள். நற்குணம் இல்லாத கீழ்மக்கள் வறுமை அடைந்தால் அப்பொழுது அவர்களின் குணம் என்னவாகும்?

சிறந்த பொன்னால் செய்யப்பட்ட குடம் உடைந்தாலும், பழைய பொன்னாகவே இருந்து பயன் தரும். மண்ணால் செய்யப்பட்ட குடம் உடைந்தால் என்ன ஆகும்? அதனால் எந்தப் பயனும் இல்லை.

கருத்து:

மேலோர் வறுமையுற்றாலும் மேன்மை குன்ற மாட்டார்கள். கீழோர் வறுமையுற்றால் சிறிதும் மேன்மையிலராகவே இருப்பார்கள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Feb-19, 12:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே