நினைவெல்லாம் நீயாக
எட்டு திசை என்று சொல்லி
எத்திக்கும் நீயாக
என் மன திசை அறியாதவளாக...?
நினைவெல்லாம் நீயாக
நித்தம் நித்தம் கனவுகள் கொண்டு
நிஜமாக வேண்டி ஒரு பயணம்
சாத்திரங்களென்று சொல்லி
சந்திப்புக்களை நிராகரித்து
சாந்தமாகி போனவளே...
சந்திரனை துணைகொண்டு
சாயும் இவ்வேளையில்
சாரயாய் சுற்றியது ஏனோ...?
தீபம் ஏற்றிட
தீ யாய் நான் இருப்பேன் என்றவளே...
நெருப்பாய் நான் தகிக்க
நெருங்காமல் இருப்பதும் ஏனோ...?