என் மரணத்தை நோக்கி

பொருளில் ஈடுபாடின்றி சம்பாதிக்க முயலாமல் நானிருக்க என்னில் இயலாமை தாண்டவம் ஆடுகிறதே இறைவா.
அந்த தாண்டவத்திற்கு முக்தி அளித்து என் இயலாமை போக்கிடு என்று உன்னிடம் வேண்டுவது பிறர் போலே பொருளை தேடி ஓடுவதற்கு அல்ல.
உன் அருள் உலகிலே நிலையானதொரு இடத்தை நான் பெறுவதற்காகவே.

என்ன கூறி அனுப்பி வைத்தாய் நீ?
மீட்பனாக உன்னோடு நானிருப்பேன், போய்வா என்றது நீ!
உலக வாழ்க்கைகளிலே இச்சை இல்லாத என்னை சூழ்நிலைகளுக்குள்ளே ஆழ்த்தி இம்சை செய்கிறாய் நீ?
பேச்சு மாறுகின்றாயோ?
சூழ்நிலைகளுக்குள் என்னை ஆழ்த்தி என் சுயத்தை இழக்க செய்கின்றாயோ?

நானாக நானிருக்க கூடாதோ?
என் தூய எண்ணங்களுக்கு நீ துணையாயிருக்கக் கூடாதோ?
ஓடாக இளைக்க வேண்டிய நான் ஓசி சோற்றிலே உடலையும் வளர்த்திருந்திட்டேன்.

வெற்றிகள் பெற்ற செருக்கில் விருப்பங்கள் பல கொண்டேன்.
ஏமாற்றத்தை தந்தே என்னை உணர்த்தினாய்.
உன்னை நினையாத நாளில்லை.
அந்த தோல்வியாலே என் ஜென்மம் நிழலாடச் செய்தாய் நீ.
வெறுப்புகள் மீண்டும் இதயத்துள்ளே குப்பைகளாய் கூட உலகை வெறுத்தால் உன்னை வெறுப்பதற்கு ஈடாகுமே என்றே அஞ்சுகிறேன்.
நிழலில் கண்ட உன்னை நிஜத்தில் காணும் நாளுக்காக காத்திருக்கிறேன் என் மரணத்தை நோக்கி...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Feb-19, 5:58 pm)
Tanglish : en maranathai nokki
பார்வை : 406

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே