மதவெறி மாசி
ஏன்டா பொன்னையா, உங்க ஊருக்கு வந்து ரண்டு நாள் ஆகுது. யாரைப் பாத்தாலும் 'மதவெறி மாசி'ங்கற சொற்றொடரைச் சொல்லறாங்க. யாருடா அந்த ஆளு? அவுரு மதவெறி பிடிச்சவரா?
@@@@
அவம் பேரு மாசிலாமணி. அவனோட அப்பன் தகாத வழிகள்ல நெறையச் சம்பாதிச்சு வச்சிருக்கான். மாசி பள்ளிப் படிப்பையே தாண்டாதவன். தின்னு கொழுத்திருக்கும் மாசி மதம் பிடிச்ச யானை மாதிரி எல்லாரையும் வம்புக்கிழுப்பான். அவன் மேல புகார் குடுத்தாக்கூட காவலர்கள் அதக் குப்பைக் கூடையிலதான் போடுவாங்க. அவ்வளவு செல்வாக்கு அந்த மாசிக்கு.
@@@@
சட்டத்தை மீறி அநியாயமா சம்பாதிச்சவன் பையனுக்கு மதம் பிடிக்கத்தானே செய்யும். உங்க ஊருக்காரங்க சொல்லற 'மதவெறி'யோட அர்த்தம் இப்பத்தான்டா புரியுது பொன்னையா.