காதலை தேனாய் குடிக்க

பல்லில் முல்லையை வைத்து
சொல்லில் அன்பை வைத்து
ஒலியில் சாந்தம் வைத்து
பெயரில் வாசம் வைத்த பேரழகே.

உன்னை மலராய் நினைத்து
என்னை வண்டாய் திரித்து
காதலை தேனாய் குடிக்க
மோகத்தில் வரும் என்னை அணைப்பாயோ.

அகத்தில் ஆசை அதிகம்
புறத்தில் அழகு கொஞ்சம்
உன்பார்வையில் எதை வைத்து
என்னை உனக்குள் நுழைப்பாய் பெண்மயிலே

உலகில் நீதான் எழிலு
உன்சொல் எல்லாம் அமுது
ஒரு சொல் சொல்லடி குயிலு
உன் காதலன் நானேயென்று
ஒரு கோடி ஆண்டுகளும் சென்று வாழ்வேனே உலகில் நின்று.
---- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (4-Mar-19, 6:40 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 125

மேலே