பறத்தல் சுகம்
காற்றின் வேகத்தில் இழுபறி ;
அடங்க மறுக்கும்இளந்தூரல்
இரை தேடுவது
இப்போது நோக்கமல்ல
சிறைக் கூட்டில்
இவ்வளவு நேரமா
கால்கள் தரையில்
பதிப்பின்
சிறகுகள் எப்படி விரியும்
சலனங்கள் முடிகின்றன
ஒரு தாவலில் -
பரந்த ஆகாயத்தில்
ஒற்றைப் பறவை .