சிறு சந்தேகம் தான்
முன்னூறு எண்ணூறுறாக உயரலாம் /
எண்ணூறு இன்னும் ஒரு படி ஏறலாம்/
தப்பு இல்லை தக்க தண்டனை
என்று கூறுவதில் ஐயம் இல்லை /
முள்செடியை மட்டும் அறுத்தீர்களா?
விஷக் கொடியை மட்டும் எரித்தீர்களா?
என்ற வினாவுக்கு விடை மட்டுமே தேவை /
வீழ்த்தப் பட்டவை கொடிய மிருகங்கள் மாத்திரமா?
அப்படியானால் மகிழ்ச்சி உங்கள்
வீர முயற்சிக்கு வாழ்த்து/
விழும் நிலையிலான ஓலைகளையும் /
சிரித்து மகிழ்ந்திருக்கும் வளரும் மொட்டுக்களையும் /
சேர்த்து அழித்து விட்டு
உயிர்க் கொல்லி நோய்களை அழித்து விட்டோம் எனச் சொல்லி மார்பு உயர்த்திருந்தால் வெட்கப் படுங்கள் /
பாரத மாதாவும் மன்னிக்க மாட்டாள் /
ஜெய்ஹிந் என்று உரைக்காதீர்கள்/
ஈழத்து நிகழ்வு இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை /
அன்று கண்ட காட்சி கண்ணை விட்டு அழியவில்லை /