இதுதான் காதலே
ஒற்றை வரி
பேசும் விழி
மனமே தெளி
இதுதான் காதலே !
ஏக்கம் வர
தூக்கம் கெட
இரவும் சுட
இதுதான் காதலே !
கொட்டும் மழை
கையில் குடை
முழுதாய் நனை
இதுதான் காதலே !
பார்க்கும் யாவும்
அவளாய் மாறும்
நிலைதான் கூறும்
இதுதான் காதலே !
கடக்கும் நொடி
மயக்கும் நெடி
உணர்ந்தால் அறி
இதுதான் காதலே !
கடக்கும் வரை
மறைவாய் மறை
அவள் தேடலின் விடை
இதுதான் காதலே !
வயதின் பசி
விழியால் புசி
அமிர்தம் ரசி
இதுதான் காதலே !
கூடும் தடை
அன்பால் உடை
உடைந்தால் விடை
இதுதான் காதலே !
தொடர்ந்து தொடர்
தொடரும் இடர்
தகர்த்து உயர்
இதுதான் காதலே !
அவளின் நடை
ஈர்க்கும் இடை
கனவில் அணை
இதுதான் காதலே !
முத்த மழை
முழுதாய் நனை
நனைவதாய் நினை
இதுதான் காதலே !
வார்த்தை இணை
கவிதைகள் புணை
வரிகளில் அவள் எனில்
இதுதான் காதலே !
சாப்பிட மற
தனியே கிட
உடலும் கெட
இதுதான் காதலே !
திருமணம் வரை
தீண்டல் குறை
குறைத்திடும் முறை
இதுதான் காதலே !
சாதியை உடை
மதங்களை புடை
ஒற்றை விடை
இதுதான் காதலே !
இதுதான் என்று
கூறிட ஆளும் அன்று
நீயே பயின்று உணர்
இதுதான் காதலே !
ந சத்யா