இந்தப் பெண்மை

கரு மேக மூட்டம் போல்
இருளுது மோகம் /
அதனாலே செங்கதிராய்
சிவக்கின்றதே வதனம் /

அடி வானத்தின் பிடியில்
ஆழ் கடலைப் போல் /
காட்சி கொடுக்கிறது
கண்ணில் ஏதேதோ ஆவல் /

சிதறிய முத்துக்களாய் /
உதறியெறிந்த நட்சத்திரமாய் /
படர்ந்த கொடியில்
மலர்ந்த முல்லையாய் /
உள்ளமெங்கும் பரப்பிலே
கிடக்கின்றது
உன் மேலான ஆசைகள்/

கொம்புத் தேனாய் நீ இருக்க /
முடவனாய் நான் இருக்க /
இடையிலே காலம் கடக்க /
நெடு மரத்து தேன் எடுத்து
சுவைக்கத்தான்
காலம் கை கொடுக்குமோ ?

என்னென்ன
யாழங்கள் செய்தாலும் /
எப்படி எப்படியோ
மாயங்கள் செய்தாலும் /
நோய் வந்து தேய்
பிறை போல் ஆனாலும்/
நெஞ்சத்தில் பாய்
போட்டு அமர்ந்த உன்னை /
போ என்று
விரட்டாது இந்தப் பெண்மை /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (9-Mar-19, 12:55 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : inthap penmai
பார்வை : 104

மேலே