குருவிக்கூடு
குருவிக்கூடு
*****************************
சிறகுகள் முளைத்து சிட்டுகள் பறக்க
பறவைக் குஞ்சினை சுமந்திட்ட அக்கூடோ
நிறையிலா இதயத்தோடு கணங்களைக் கழிக்க
மரமுதிர்த்த சருகுகள் தனிமையைக் கொண்டதால்
சீராக வேய்ந்த அக்கூட்டினைப் பார்க்கையில்
உறவினர் போலவே சோகத்தில் ஆழ்ந்ததே !
சூறையின் வேகத்தில் கூடுஅது அசைந்தாலும்
முறையாய் அணைந்த கிளையதன் பிடியில்
இருப்பது உயிருடன் தாளாத நிலையிலும் !

