என்ன சொல்லி விழுகிறது, மண்ணில் மழைத்துளி

வான் அன்னையின் சீதனங்கள் ஒவ்வொன்றையும்
வீண்போகாது காத்து மண்ணில்
விழும் ஒவ்வொரு துளியும், நீர் துளியல்ல,
வைர துளிகளாய் விழ செய்யும் முகில்கள்! அப்படி
விழும் ஒவ்வொரு துளியும் சொல்லிடும்....!

"விதையும் ஆதாரமும் நானே,
விந்தையின் சாரமும் நானே...!
வயிற்று பசி போக்க மண்ணை
வளமாய் மாற்றும் தேவதையும் நானே...!
வாழும் உயிர்க்கெல்லாம்
வரம் தரும் தெய்வமும் நானே..!
வண்ண மலர்களின் சிரிப்பொலியும், தோகை
விரிக்கும் மயிலின் நடனஒளியும் மண்ணில்
விழும் எந்தன் துளியின் ஒளியால்
விளையும் அற்புதமன்றோ....!"

" வீதியெல்லாம் வழியும் வெள்ளமதில்
விளையாடிகளிக்க, மழலைகளோ துள்ளி குதிக்க,
வாலிபரும், கன்னியரும் காதல் வயப்பட்ட; இதனைக்கண்ட
வயோதிகரின் மனதிலும் கூட உற்சாகம் பொங்கிட,
வாழும் உயிர்களுக்கெல்லாம் இன்பத்தை
வாரி வழங்கும் அட்க்ஷய பாத்திரமும் நானே...! அங்ஙனம்
விழும் நான் பள்ளத்தில், மேட்டிலும்
விழுந்து அருவியாய், நதியாய், ஆறுகளாய்
வழிந்தோடி உருமாறி, பணிவோடு
விளைந்து, நெளிந்து சென்றாலன்றோ இவ்வுலகம் உய்யும்; ஆகாயத்திலிருந்து
விழும் போது கூட நான் அகந்தை கொண்டதில்லை....! ஆனால்
வருங்கால விளைவுகளின்
வினையறியாது, நிகழ்கால
வினைக்கோ விடையும் அறியாது
வீழும் மானுடமே....! உன் அகந்தை
விட்டொழிக்கும் நாள் எந்நாளோ....! என்று சொல்லி
வீழ்கிறதே இம் மழைத்துளி......!"

இவண்

சங்கீதா தாமோதரன்

எழுதியவர் : சங்கீதாதாமோதரன் (11-Mar-19, 1:10 pm)
சேர்த்தது : Sangeethadamodharan
பார்வை : 1710

மேலே