வளர்ச்சி

இளமையின் வேகம் கடவுள்களே
இல்லை யென்று சொல்லவைத்தது,
வளர்ந்து பிள்ளைகள் வேலைக்கென
வேறிடம் பார்த்துச் சென்றபின்னே
தளர்வுடன் உடல்வலு குறைந்தபோது
தனிமை முதுமையில் வந்ததுவே,
வளர்ந்தது பற்று தெய்வத்திடம்
வந்து விட்டார் கோவிலுக்கே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Mar-19, 7:26 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : valarchi
பார்வை : 94

மேலே