தளிர்காட்டி தென்றலுறத் தேமா வருந்தும் சுழற்கால் வர – நன்னெறி 19

நேரிசை வெண்பா

நல்லோர் வரவால் நகைமுகம்கொண்(டு) இன்புறீஇ
அல்லோர் வரவான் அழுங்குவர் - வல்லோர்
திருந்தும் தளிர்காட்டி தென்றலுறத் தேமா
வருந்தும் சுழற்கால் வர. 19 – நன்னெறி

பொருளுரை:

தேங்கனிகளைக் கொண்ட மாமரம் தென்றற் காற்று வரத் தளிரைத் காட்டிச் சிறப்புற்றிருக்கும்; சுழல் காற்று வர வருந்தும்;

அதுபோல, கல்வியறிவில் வல்லவர் நல்லவருடைய வருகையினாலே முகமலர்ச்சி கொண்டு இன்பத்தை அடைந்து தீயவுருடைய வருகையினாலே துன்பத்தை அடைவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Mar-19, 8:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

சிறந்த கட்டுரைகள்

மேலே