இதிகாசங்கள்

சீதையை இராவணன்
சிறையெடுக்காமல் விட்டிருந்தால்,
சிதைந்திருக்காது தென்னிலங்கை..

கேட்டதைத் துரியன்
கொடுத்திருந்தால் பாண்டவர்க்கு,
கெட்டிருக்காது
கௌரவர் குடி..

மதி மயங்கிடும்
விதியின் சதுராட்டத்தில்
உதித்தவைதான்
இந்த
இதிகாசங்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Mar-19, 6:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78
மேலே