ஆண்ட்ராய்டு
நானொரு தேனி
நீயொரு ரோசாவென
ஆரத் தழுவி
அவ்வப்போது உரசி
அன்றாட கதைகள்
பேசி மகிழ்ந்து
நாளொரு மேனி
பொழுதொரு வண்ணமாய்
போன நாட்களை
இனி கதையாக
கூட சொல்லிக்
கேட்க ஆளின்றி
ஆட்கொள்ளி கிருமி
ஆண்ட்ராயிடு பரவி
அதுதந்த ஊரலை
இராப் பகலாய்
தேய்த்தும்
நிற்காத ஊரலில்
நினைவது தப்பி
தேய்ப்பது மட்டும்
உறவானது உண்மை
உறவானது தேய்ந்தேப்
போனது..,