நாளும் உன் நினைவுகளால்

அன்பால் நீ எனை வீழ்த்தி
அரவணைத்துக்கொள்ள ,
மௌனத்தால் சில நிமிடம் பேசி ,
கண்களால் சிறுபொழுது சிறகடித்துக்கொள்ள ,
உன் முகம் பார்த்து
என் நாட்களை நகர்த்திட
இதயம் ஏக்கம் கொள்கிறது ...
உன் கைசேரும் நாளை எண்ணி
நாளும் உன் நினைவுகளால்
உன்னவள் ....