கோலமாவு கோகிலா

அரிசி மாவு கோலமிட்டு
அருகில் நின்று
பார்க்கிறாயே
கோல மாவை விட்டு விட்டு
கோகிலாவை அல்லவா
மொய்க்கின்றன இந்த
எறும்புகள்...
காலையிலேயே
கண் விழித்து
கடும் தவம் புரிந்தது
உன் தரிசனத்திற்கு தானே...
எனக்குப் போட்டியாக இந்த
எறும்புகளுமா...
மொய்த்தது போதும்
எறும்புகளே..
தையலை தனியே
விட்டு விடுங்கள்..
கோலம் போட்ட
அந்த கைகளுக்கு
கோடி முத்தம்
நான் தர வேண்டும்..!!!