இரும்பாய் இதயம்
அனலில் காய்த்து
உலையில் வைத்து
அடித்தால்தான்,
வடிவம் பெறும்
இரும்பு-
நாம்
விரும்பியபடி..
அப்படித்தான் மனதும்,
துன்பங்கள்
தொடர்ந்து வரும்போது
அது
திடம் பெற்றுவிடுகிறது,
இதயம்
எதையும் தாங்கும்
இதம் பெற்றவுடன்
இறைவன் வந்துவிடுகிறான்-
இதமாக அருகில்...!