பங்குனி உத்திரத்தில் மால்-வேலவர்க்கோர் துதி
திருமாலுக்கும் அவன் மருகன் முருகனுக்கும்
பங்குனி உத்திரம் இன்று திருநாள்
வேல் வேல் வெற்றிவேலென்று வேலனைப்போற்றி
துதிக்க, வேலவன் சொல்வான் என் மாமனையும்
மாடுமேய்க்கும் கண்ணா உன் கையில் வேல்போற்றி
என்று முதல் வணக்கம் செய்துவிட்டு என்னிடம்
வந்தால் வேண்டிய வரமெல்லாம் தந்திடுவேன் என்பான்;
கண்ணன் அவன் கையில் வேலுண்டு
திருப்பாவையில் ஆண்டாள் சொன்னாள்,
மாலும் வேலும் இசைந்தால் வேண்டுவோர்க்கு உண்டே
இகபர சுகங்கள் இரண்டும்