செல்லமே---பாடல்---

வா வெண்ணிலா மெட்டில்...

பல்லவி :

பூ முல்லையே நெஞ்சில் நீதான் ஆடும் காலமே... (2)
தோளோடு மாலையாய் நான் சூடுவேன் நாளுமே... (2)

பூ முல்லையே...

சரணம் 1 :

நகத்தாலக் கீறும் விரலோட நேசம்
சிரிக்கின்ற ஓசை சுகமான ராகம்

பனித்துளி போல அட அட
தவழ்ந்திடும் மேனி இது இது
கடலலையாக அட அட
நடந்திடும் பாதம் இது

இதைக்காண... ஆ.ஆ.ஆ..
இதைக்காண வரங்கேட்டு
இன்னும் கோடி கண்கள் வாங்குவேன்...

பூ முல்லையே...

சரணம் 2 :

ஒரு முத்தம் போதும் உயிர் வாழும் தேகம்
உதட்டோர எச்சில் தாய்ப்பாலின் வாசம்

மழையென நீயும் தொட தொட
நிலமென நானும் வர வர
இணைந்திடும் நேரம் இது இது
துளிர்த்திடும் வாழ்வும் இனி

இமைக்காம... ஆ.ஆ.ஆ..
இமைக்காம உனைக்காத்து
உயிர் மீது உன்னைத் தாங்குவேன்...

பூ முல்லையே...

எழுதியவர் : இதயம் விஜய் (21-Mar-19, 5:13 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 1151

மேலே