சுமை

======
கைக்கு வந்த ஆயிரம் ரூபாயில்
நூறு மூடைகளை சுமந்த
முதுகுவலி சற்றே ஆறுதலடையும்
அவனது சாயங்காலபொழுதொன்றில்
மளிகைக்கடைச் சிட்டையில் தொடங்கி
மருத்துவம், பிள்ளையின் படிப்பு,
மகளின் கல்யாணம்,
ஒழுகும் கூரை மாற்றும் செலவு என்று
இரக்கமின்றி குடும்பச்சுமை ஒரு
அட்டையைப்போல் ஒட்டிக்கொண்டு
அவனது உயிரைக் குடிக்கத் தொடங்குகிறது
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Mar-19, 2:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : sumai
பார்வை : 91

மேலே